/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கடப்பாக்கம் பள்ளியில் புதிய கட்டடத்திற்கு பூமி பூஜை
/
கடப்பாக்கம் பள்ளியில் புதிய கட்டடத்திற்கு பூமி பூஜை
கடப்பாக்கம் பள்ளியில் புதிய கட்டடத்திற்கு பூமி பூஜை
கடப்பாக்கம் பள்ளியில் புதிய கட்டடத்திற்கு பூமி பூஜை
ADDED : செப் 20, 2025 08:05 PM
செய்யூர்:கடப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில், 98.96 லட்சம் ரூபாயில் நான்கு வகுப்பறைகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்ட நேற்று பூமி பூஜை நடந்தது.
செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கத்தில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு, 600க்கும் மேற்பட்ட மாணவியர் படித்து வருகின்றனர்.
மாணவியரின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய வகுப்பறைகள் இல்லாமல் இருந்தது. புதிய கட்டடம் கட்ட கல்வி அதிகாரிகளிடம் நீண்ட நாட்களாக, மாணவியர் மற்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
கோரிக்கையை ஏற்று, மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரைபடி, 98.96 லட்சம் ரூபாயில் கூடுதல் கட்டடம் கட்ட அரசு முடிவு எடுத்துள்ளது. அதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. விரைவில் கட்டுமான பணிகள் துவங்கும் என, கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.