/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாலாற்று படுகையில நிலக்கடலை சாகுபடி
/
பாலாற்று படுகையில நிலக்கடலை சாகுபடி
ADDED : ஜன 08, 2025 10:15 PM

கூவத்துார்:பாலாற்று படுகை பகுதிகளில், விவசாயிகள் நிலக்கடலை பயிரிட துவங்கி உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பாலாறு பாய்ந்து, வங்க கடலில் கலக்கிறது. ஆற்றுப்படுகை பகுதிகளில் விவசாயிகள், நெல், கேழ்வரகு, எள், நிலக்கடலை, கரும்பு, காய்கறி ஆகியவை பயிரிடுகின்றனர்.
இப்பகுதியில் ஆற்று நீர்வளம், மண்வளம் மிகுந்து, செடிகள் தழைத்து, நிலக்கடலை நன்கு பருத்து விளையும். எண்ணெய் உற்பத்தி, கடலை மிட்டாய் ஆகிய மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிக்க, இப்பகுதி நிலக்கடலை தரமாக உள்ளதால், பிற மாவட்ட வியாபாரிகள் விரும்பி வாங்குகின்றனர்.
வடகிழக்கு பருவமழை ஓய்ந்த நிலையில் கடலுார், செம்பூர், பரமேஸ்வரமங்கலம், பவுஞ்சூர், அணைக்கட்டு, வாயலுார், இரும்புலிச்சேரி, எடையாத்துார், நல்லாத்துார், ஆயப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், விவசாயிகள் நிலக்கடலை பயிரிடத் துவங்கினர். சில மாதங்களில் கடலை முற்றியதும், தரகர்கள் முகாமிடுவர்.