ADDED : நவ 01, 2026 07:57 PM
அ நிறம் | அளவு
செங்கல்பட்டு: குரூப் – 2 தேர்வு நடந்த தேர்வு மையங்களை, செங்கல்பட்டு கலெக்டர் வீரப்பன் இன்று (நவ.,1) ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் குரூப் - 2, 2ஏ தேர்வு, தமிழகம் முழுதும் இன்று நடந்தது.
காலை 9:30 மணி முதல் 12:30 மணி வரை தேர்வுகள் நடைபெற்றன.
செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம் ஆகிய தாலுகாக்களில் 44 தேர்வு மையங்களில், 10,343 தேர்வு எழுதினர். 3,602 தேர்வு எழுத வரவில்லை.
செங்கல்பட்டு புனித சூசையப்பர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தை செங்கல்பட்டு கலெக்டர் வீரப்பன் ஆய்வு செய்து தேர்வர்களுக்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
