/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஜி.எஸ்.டி., சாலையில் குவிந்துள்ள ஜல்லிக்கற்களால் விபத்து அபாயம்
/
ஜி.எஸ்.டி., சாலையில் குவிந்துள்ள ஜல்லிக்கற்களால் விபத்து அபாயம்
ஜி.எஸ்.டி., சாலையில் குவிந்துள்ள ஜல்லிக்கற்களால் விபத்து அபாயம்
ஜி.எஸ்.டி., சாலையில் குவிந்துள்ள ஜல்லிக்கற்களால் விபத்து அபாயம்
ADDED : நவ 23, 2024 01:04 AM

மறைமலை நகர்:திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், லட்சக்கணக்கான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. இந்த சாலை, தென்மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலை.
இந்த சாலையில், தாம்பரம் மார்க்கத்தில், பரனுார் ரயில்வே மேம்பாலம் அருகில், செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த வாகனங்கள் வந்து செல்ல அமைக்கப்பட்டு இருந்த தார் சாலை சிதிலமடைந்ததையடுத்து, கடந்த வாரம் புதிதாக சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது.
இதற்காக, ஜி.எஸ்.டி., சாலையில் குவியல்களாக ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு, பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது பணிகள் முடித்த நிலையில், மீதம் உள்ள ஜல்லிக்கற்கள் அப்புறப்படுத்தப்படாமல், நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளன.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
தேசிய நெடுஞ்சாலையில் வெளியூரை சேர்ந்த வாகனங்கள் அதிக அளவில் வந்து செல்கின்றன. இவர்களுக்கு, சாலையில் ஜல்லிக்கற்கள் குவியலாக இருப்பது தெரிய வாய்ப்பு இல்லை.
மேலும், இந்த பகுதியில், இரவில் விளக்குகளும் எரிவதில்லை. இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் தடுமாறி வருகின்றனர். எனவே, இந்த பகுதியில் கொட்டப்படுள்ள ஜல்லிக்கற்களை அகற்ற, மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.