/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஜி.எஸ்.டி., சாலையில் வாகன நெரிசல் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்பார்ப்பு
/
ஜி.எஸ்.டி., சாலையில் வாகன நெரிசல் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்பார்ப்பு
ஜி.எஸ்.டி., சாலையில் வாகன நெரிசல் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்பார்ப்பு
ஜி.எஸ்.டி., சாலையில் வாகன நெரிசல் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்பார்ப்பு
ADDED : நவ 20, 2024 11:50 PM

கூடுவாஞ்சேரி:வண்டலுார் ஜி.எஸ்.டி., சாலையில் இருந்து, செங்கல்பட்டு வரை உள்ள ஜி.எஸ்.டி., சாலையின் இருபுறமும், காலை மற்றும் மாலை வேளைகளிலும், வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களிலும் வாகன நெரிசல் அதிகரிக்கிறது.
பெருங்களத்துாரில் இருந்து, செங்கல்பட்டு செல்வதற்கு, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பயணணிக்க வேண்டி இருப்பதாக, வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறக்கப்பட்டதில் இருந்து, தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரையிலான ஜி.எஸ்.டி., சாலையின் இரு மார்க்கத்திலும், கடுமையான வாகன நெரிசல் ஏற்படுகிறது.
மேலும், வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில், சென்னையில் வசிக்கும் தென்மாவட்டங்களைச் சேர்ந்தோர், தங்களது சொந்த ஊர்களுக்கு, சொந்த வாகனம் வாயிலாகவும், அரசு மற்றும் தனியார் ஆம்னி பேருந்து வாயிலாகவும் செல்கின்றனர்.
இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் அமைச்சர்கள், போக்குவரத்து, நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம், சில மாதங்களுக்கு முன் நடந்தது.
அதில், ஜி.எஸ்.டி., சாலையின் இரு மார்க்கத்திலும் உள்ள அணுகு சாலையை சீரமைத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரான போக்குவரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
ஆனால், அந்த தீர்மானம் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. சாலையின் இருபுறமும் உள்ள அணுகு சாலை, இதுவரை சீரமைக்கப்படவில்லை. ஆக்கிரமிப்புகளும் முறையாக அகற்றப்படவில்லை.
நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறையினர் பணிகளை சரிவர செய்யவில்லை. இதனால் தொடர்ந்து, வாகன நெரிசல் ஏற்படுவதோடு, ஆம்புலன்ஸ் கூட நெரிசலில் சிக்குகிறது.
எனவே, சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அணுகு சாலையை சீரமைத்து, சீரான போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்ய நெடுஞ்சாலை துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.