/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஜி.எஸ்.டி., சாலை கடவுப்பாதை கீழக்கரணையில் மூடியதால் மகிழ்ச்சி
/
ஜி.எஸ்.டி., சாலை கடவுப்பாதை கீழக்கரணையில் மூடியதால் மகிழ்ச்சி
ஜி.எஸ்.டி., சாலை கடவுப்பாதை கீழக்கரணையில் மூடியதால் மகிழ்ச்சி
ஜி.எஸ்.டி., சாலை கடவுப்பாதை கீழக்கரணையில் மூடியதால் மகிழ்ச்சி
ADDED : அக் 09, 2024 12:30 AM

மறைமலைநகர்:ஜி.எஸ்.டி., சாலையில் தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை தென் மாவட்டங்களை, சென்னையுடன் இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது.
மறைமலை நகர் அடுத்த கீழக்கரணை பேருந்து நிறுத்தம் அருகே, சாலையை கடக்கும் கடவுப்பாதை உள்ளது.
இந்த வழியாக தினமும் கீழக்கரணை, பெரிய செங்குன்றம் கிராம மக்கள் மற்றும் மறைமலைநகர் சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், சாலையை இருபுறமும் கடந்து சென்று வருகின்றனர்.
இது தவிர 500 மீட்டர் தொலைவில் இருபுறமும் மெல்ரோசாபுரம், பேரமனூர் உள்ளிட்ட இடங்களில் சாலை சந்திப்பு உள்ளது.
இருசக்கர வாகனங்கள் கடக்கும் பாதையால், அடிக்கடி விபத்து நடந்து வந்தன. இதன் காரணமாக, இந்த கடவுப்பாதையை மூட வேண்டும் என, வாகன ஓட்டிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, போக்குவரத்து போலீசார் இந்த பகுதியில், சிமென்ட் தடுப்பு கற்கள் அமைத்து, வாகனங்கள் செல்ல முடியாதபடி தடுப்பு அமைத்துள்ளனர்.
இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறியதாவது:
இந்த கடவுப்பாதையை வாகனங்கள் வருவது கூட தெரியாமல், உள்ளூர் வாசிகள் கடக்க முயலும் போது விபத்தில் சிக்கி வருவதால், கடவுப்பாதை மூடப்பட்டு உள்ளது.
வாகன ஓட்டிகள் அருகில் உள்ள மெல்ரோசாபுரம் சாலை சந்திப்புகளில், சாலையை கடக்க பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.