/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாணவர்களுக்கு வழிகாட்டி நிகழ்ச்சி
/
மாணவர்களுக்கு வழிகாட்டி நிகழ்ச்சி
ADDED : டிச 15, 2024 02:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ், மாணவர்கள் விடுதிகள் 14 உள்ளன. இங்கு, 910 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
இவர்களுக்கு உயர் கல்வி, வேலைவாய்ப்பு குறித்த வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலர் வேலாயுதம் தலைமையில், நேற்று, நடந்தது.
இதில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.