/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கல்பாக்கத்தில் கைவினை பொருட்கள் கண்காட்சி
/
கல்பாக்கத்தில் கைவினை பொருட்கள் கண்காட்சி
ADDED : நவ 24, 2024 07:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கல்பாக்கம்:கல்பாக்கத்தில், காதி, கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை துவக்கப்பட்டுள்ளது.
காதி கிராமோத்யோக் பவன் சார்பில், கல்பாக்கம் நகரியம் பெண்கள் விடுதியில், காதி மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி துவக்கப்பட்டுள்ளது.
தினசரி காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை, வரும் டிச., 1ம் தேதி வரை இக்கண்காட்சி நடக்கிறது. தமிழக காதி பொருள் வகைகளுக்கு 25 சதவீதம், பிற மாநில காதி பொருள் வகைகளுக்கு 20 சதவீதம் தள்ளுபடி உண்டு என, காதி நிர்வாகம் அறிவித்துள்ளது.