/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சுகாதார மைய கட்டடம் புதுப்பாக்கத்தில் திறப்பு
/
சுகாதார மைய கட்டடம் புதுப்பாக்கத்தில் திறப்பு
ADDED : செப் 14, 2025 02:20 AM

திருப்போரூர்:திருப்போரூர், புதுப்பாக்கத்தில், 30 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சுகாதார மைய கட்டடம், நேற்று திறக்கப்பட்டது.
திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுப்பாக்கம் ஊராட்சியில், 10,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இப்பகுதியினர் மருத்துவ சிகிச்சைக்கு அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்ல, கேளம்பாக்கம் போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது.
இதனால், கர்ப்பிணியர் மற்றும் முதியோர் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, புதுப்பாக்கம் ஊராட்சியில் சுகாதார நிலையம் ஏற்படுத்த வேண்டுமென, கிராமத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையறிந்த தன்னார்வலர் ஒருவர், பொதுமக்களின் சுகாதார பயன்பாட்டிற்காக, சொந்த செலவில் 30 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய சுகாதார மைய கட்டடம் கட்டித்தர முடிவு செய்தார்.
அதன்படி, இதற்கான கட்டுமான பணிகள், கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டு, தற்போது அனைத்து கட்டுமான பணிகளும் முடிந்து, நேற்று பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.