/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அச்சிறுபாக்கம் மருத்துவமனையில் சுகாதார துறை அமைச்சர் திடீர் ஆய்வு
/
அச்சிறுபாக்கம் மருத்துவமனையில் சுகாதார துறை அமைச்சர் திடீர் ஆய்வு
அச்சிறுபாக்கம் மருத்துவமனையில் சுகாதார துறை அமைச்சர் திடீர் ஆய்வு
அச்சிறுபாக்கம் மருத்துவமனையில் சுகாதார துறை அமைச்சர் திடீர் ஆய்வு
ADDED : ஜன 30, 2024 04:20 AM

அச்சிறுபாக்கம் : சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், சென்னையில் இருந்து திண்டிவனம் வழியாக, விழுப்புரம் பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, நேற்று காலை சென்று கொண்டு இருந்தார்.
அப்போது, அச்சிறுபாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், திடீர் ஆய்வில் ஈடுபட்டார்.
அவசர விபத்து சிகிச்சை மையம், உள்நோயாளிகள் பிரிவு, பிரசவ அறை, ஊசி போடும் இடம், மாத்திரை வழங்கும் இடம், மருந்து வைக்கும் பகுதி, மருத்துவர்கள் அறை உள்ளிட்ட பகுதிகளில் சோதனை செய்தார்.
நோயாளிகளிடம் மருத்துவர்களின் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். அமைச்சரின் திடீர் விசிட்டால், ஆரம்ப சுகாதார நிலைய வளாகம் பரப்பரப்பாக காணப்பட்டது.