/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நீர் நிலைகளில் கொட்டப்பட்டும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு
/
நீர் நிலைகளில் கொட்டப்பட்டும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு
நீர் நிலைகளில் கொட்டப்பட்டும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு
நீர் நிலைகளில் கொட்டப்பட்டும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு
ADDED : ஜன 18, 2025 01:45 AM

மறைமலை நகர்:மறைமலை நகர் நகராட்சி ,கூடலூர் பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இங்கு 2 கி,மீ., தூரம் உள்ள கூடலூர் -கோவிந்தாபுரம் செல்லும் ஏரிக்கரை சாலை உள்ளது. இந்த சாலையை கோவிந்தாபுரம், கருநிலம், மருதேரி உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மறைமலை நகர் வந்து செல்ல பயன்படுத்தி வருகின்றனர்.
இச்சாலை மருதேரி- சிங்கபெருமாள் கோவில் சாலையின் இணைப்பு சாலை. கூடலுார் ஏரிக்கரை சாலை மற்றும் அதை ஒட்டியுள்ள வனப்பகுதியில் சமீப காலமாக அதிக அளவில் குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
கூடலுார் ஏரிக்கரை மற்றும் சுற்று பகுதியில் இறைச்சி கழிவுகள், தொழிற்சாலை கழிவு பொருள்களை மர்ம நபர்கள் இரவு நேரங்களில் கொண்டு வந்து கொட்டி விட்டு செல்கின்றனர். அருகில் உள்ள வனப்பகுதியிலும் குப்பைகள் பழைய மின் விளக்குகள் உள்ளிட்டவை கொட்டப்படுவதால் இந்த காடுகளில் உள்ள மயில், மான், முயல் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க வனத்துறை அதிகாரிகள் மற்றும் நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.