/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கொள்முதல் நிலையம் இல்லாமல் நனைந்து வீணாகும் நெல் குவியல்
/
கொள்முதல் நிலையம் இல்லாமல் நனைந்து வீணாகும் நெல் குவியல்
கொள்முதல் நிலையம் இல்லாமல் நனைந்து வீணாகும் நெல் குவியல்
கொள்முதல் நிலையம் இல்லாமல் நனைந்து வீணாகும் நெல் குவியல்
ADDED : செப் 06, 2025 01:49 AM

மறைமலை நகர்:சாஸ்திரம்பாக்கத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால், அறுவடை முடிந்த நெல் முளைத்து வீணாகி வருகின்றன.
காட்டாங்கொளத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொளத்துார், வெங்கடாபுரம், செட்டிபுண்ண்ணியம், பாலுார், கொளத்தாஞ்சேரி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில், 1,000 ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் பயிரிடப்படும் நெல் அறுவடைக்கு பின், வில்லியம்பாக்கம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் வாயிலாக அரசு கொள்முதல் செய்து வருகிறது.
நவரை சாகுபடிக்கு இதுவரை வில்லியம்பாக்கத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கபடாததால், கொளத்துார் கிராமத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல் மழையில் நனைந்து, முளைத்து வீணாகி வருகின்றன.
இது குறித்து, விவசாயிகள் கூறியதாவது:
ஆண்டுதோறும் வில்லியம்பாக்கம் அல்லது சாஸ்திரம்பாக்கம் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படுவது வழக்கம். அறுவடை பணிகள் முடிந்து 20 நாட்கள் கடந்த நிலையில், இதுவரை நெல் கொள்முதல் நிலையம் திறப்படாமல் உள்ளது.
இதனால், பல விவசாயிகள் தனியாருக்கு நெல்லை விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால், சாஸ்திரம்பாக்கத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறந்தால் வசதியாக இருக்கும்.
கடந்த ஆண்டு வில்லியம்பாக்கத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்ட போது லாரிகள் சேற்றில் சிக்கி சிரமம் ஏற்பட்டது.
தற்போது மேட்டுப் பகுதியான சாஸ்திரம்பாக்கத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அச்சிறுபாக்கம் அச்சிறுபாக்கம் அடுத்த கொங்கரை மாம்பட்டு, முருங்கை, களத்துார், கீழ் அத்திவாக்கம், ஒரத்தி ஊராட்சியில், குறுவை சாகுபடியில் கிணறு மற்றும் ஏரி பாசனத்தின் மூலமாக விவசாயிகள் நெல் பயிரிட்டு வந்தனர்.
கடந்த சில நாட்களாக அறுவடை பணிகள் நடந்து வருவதால், விவசாயிகள் கொங்கரை மாம்பட்டு ஊராட்சியில் ஏற்கனவே நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்த பகுதியில், சுற்றுவட்டார கிராம பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொட்டி பாதுகாத்து வந்தனர்.
இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, கொங்கரை மாம்பட்டு ஊராட்சியில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நேற்று நடந்தது. ஒன்றிய குழு தலைவர் கண்ணன், ஊராட்சி தலைவர் விஜயன், விவசாயிகள் பங்கேற்றனர்.