/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிராம உதவியாளர்களுக்கு இன்று எழுத்து தேர்வு
/
கிராம உதவியாளர்களுக்கு இன்று எழுத்து தேர்வு
ADDED : செப் 06, 2025 02:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், 41 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு, இன்று எழுத்து தேர்வு நடக்கிறது.
கலெக்டர் சினேகா வெளியிட்டுள்ள அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள 41 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பட உள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் இருந்து பெறப்பட்ட பட்டியல் மற்றும் நேரடியாக பெறப்பட்ட விண்ணப்பங்களை கூராய்வு செய்து, ஏற்கப்பட்ட தேர்வர்களுக்கு, இன்று காலை 9:00 மணிக்கு எழுதுதல் திறனறித் தேர்வு நடக்கிறது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.