/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டில் கனமழை; 5 கி.மீ., அணிவகுத்த வாகனங்கள்
/
செங்கல்பட்டில் கனமழை; 5 கி.மீ., அணிவகுத்த வாகனங்கள்
செங்கல்பட்டில் கனமழை; 5 கி.மீ., அணிவகுத்த வாகனங்கள்
செங்கல்பட்டில் கனமழை; 5 கி.மீ., அணிவகுத்த வாகனங்கள்
ADDED : அக் 21, 2025 11:31 PM

மறைமலை நகர்: செங்கல்பட்டு புறநகர் பகுதிகளான சிங்கபெருமாள்கோவில், மறைமலைநகர், காட்டாங்கொளத்துார், பொத்தேரி, ஆப்பூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று கனமழை பெய்தது. இதனால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும், சாலையோரம் உள்ள கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிகால்வாய்களில் உள்ள பிளாஸ்டிக் குப்பை, மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டன. மழைநீருடன் கழிவுநீர் கலந்து, சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.
செங்கல்பட்டு மணிக்கூண்டு- புதிய பேருந்து நிலையம் பகுதியில், சாலையில் தண்ணீர் தேங்கியது. புதிதாக கட்டப்பட்ட மழைநீர் கால்வாய்களுக்கு, சாலையில் தேங்கிய மழைநீர் செல்ல வழி இல்லாததால், குளமாக மாறியது.
இதனால், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். மேலும், சுற்றியுள்ள கிராமங்களில் மழை காரணமாக மின் தடை ஏற்பட்டது.
மதுராந்தகம் மதுராந்தகம், புக்கத்துறை, படாளம் உள்ளிட்ட பகுதிகளில், சென்னை -- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஓராண்டாக மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதன் காரணமாக, விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில், சென்னையில் இருந்து திருச்சி மார்க்கமாக செல்லும் வாகனங்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்குகின்றன.
நேற்றுடன் தீபாவளி விடுமுறை முடிந்ததால், இருசக்கர வாகனங்கள், கார் மற்றும் பேருந்துகளில் சொந்த ஊர் சென்ற மக்கள், சென்னைக்கு படையெடுத்து வருகின்றனர்.
தற்போது, மேம்பால பணி நடைபெறுவதால், மதுராந்தகம், படாளம், புக்கத்துறை பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் இரு மார்க்கத்திலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால், இரு மார்க்கத்திலும் 5 கி.மீ.,க்கு வாகனங்கள் ஊர்ந்து சென்றன.