/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சூறைக்காற்றுடன் கனமழை மதுராந்தகத்தில் மின்சாரம் 'கட்'
/
சூறைக்காற்றுடன் கனமழை மதுராந்தகத்தில் மின்சாரம் 'கட்'
சூறைக்காற்றுடன் கனமழை மதுராந்தகத்தில் மின்சாரம் 'கட்'
சூறைக்காற்றுடன் கனமழை மதுராந்தகத்தில் மின்சாரம் 'கட்'
ADDED : மே 06, 2025 12:13 AM

மதுராந்தகம், மதுராந்தகத்தில், சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக, 20க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்ததால், 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று விடியற்காலை வரை, சூறை காற்றுடன் பெய்த கனமழையால், சாலையோரம் இருந்த மரங்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன.
இதனால் கருணாகர விளாகம், மொறப்பாக்கம், கூடலுார், தண்டலம், பெரும்பாக்கம், கழனிபாக்கம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில், இரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதனால், பொதுமக்கள் துாக்கமின்றி, இரவு முழுதும் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால், மதுராந்தகம் மின்வாரியம் சார்பில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், பல கிராமங்களில் குடி தண்ணீர் வரவில்லை என, பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
எனவே, மின்வாரிய துறை அதிகாரிகள் உடனடியாக மின் கம்பங்களை சரி செய்து, மின்சாரம் வழங்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது, மின் கம்பங்களை சரி செய்யும் பணியில், மதுராந்தகம் மின்வாரியத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

