/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அணுகு சாலையை சீரமைக்காததால் கடும் போக்குவரத்து நெரிசல்
/
அணுகு சாலையை சீரமைக்காததால் கடும் போக்குவரத்து நெரிசல்
அணுகு சாலையை சீரமைக்காததால் கடும் போக்குவரத்து நெரிசல்
அணுகு சாலையை சீரமைக்காததால் கடும் போக்குவரத்து நெரிசல்
ADDED : ஜன 26, 2025 01:57 AM

கூடுவாஞ்சேரி,:நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி , கூடுவாஞ்சேரி சிக்னல் அடுத்துள்ள, சீனிவாசபுரம் சிக்னலில் செங்கல்பட்டில் இருந்து, தாம்பரம் நோக்கி வரும் வழியில், மீனாட்சி நகர் ஜி.எஸ்.டி., சாலையில் இருந்து சீனிவாசபுரம் மற்றும் கூடுவாஞ்சேரி சிக்னல் வரையிலான, அணுகு சாலை சீரமைக்க படாமல் உள்ளது.
இதனால் இந்த இடத்தில் காலை மற்றும் மாலை வேளைகளில் அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் சிறு சிறு விபத்துகளும் ஏற்படுகிறது.
இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த, சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:
மீனாட்சி நகர், செல்லப்பா நகர், டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மீனாட்சி நகரிலிருந்து , கூடுவாஞ்சேரி சிக்னல் வரையில் உள்ள அணுகு சாலையை பயன்படுத்தி செல்கின்றனர்.
சில மாதங்களுக்கு முன், இந்த அணுகு சாலையை சீரமைக்க, பணிகள் தொடங்கிய நிலையில், பணி நிறைவு பெறாமல் உள்ளது. இதனால் இந்த சாலையில் உள்ள, இருசக்கர வாகன ஷோரூம்கள் மற்றும் சிமெண்ட் கம்பி விற்பனை செய்யும் கட்டுமான நிறுவனங்கள்.
தங்களது பொருட்களை அணுகு சாலையை ஆக்கிரமித்து, அதில் செங்கல்,  கம்பிகளை அடுக்கி வைத்து, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அணுகு சாலையை பயன்படுத்தப்பட முடியாதபடி வைத்துள்ளனர்.
இதனால் இப்பகுதியில் அணுகு சாலையை பயன்படுத்தி செல்ல முடியாமல், பாதசாரிகள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, சீரமைக்கப்படாமல் உள்ள, அணுகு சாலையை சீரமைக்க நெடுஞ்சாலை துறைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

