/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தண்டலம் ஆறுவழி சாலை சந்திப்பில் உயர்கோபுர மின் விளக்கு அவசியம்
/
தண்டலம் ஆறுவழி சாலை சந்திப்பில் உயர்கோபுர மின் விளக்கு அவசியம்
தண்டலம் ஆறுவழி சாலை சந்திப்பில் உயர்கோபுர மின் விளக்கு அவசியம்
தண்டலம் ஆறுவழி சாலை சந்திப்பில் உயர்கோபுர மின் விளக்கு அவசியம்
ADDED : டிச 08, 2025 06:47 AM
திருப்போரூர்:தண்டலம் ஆறுவழிச்சாலை சந்திப்பில், உயர்கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்போரூர் அடுத்த தண்டலம் வழியாக, காலவாக்கம் முதல் ஆலத்துார் ஊராட்சியில் அடங்கிய வெங்கலேரி வரை ஆறுவழிச்சாலை 7.45 கி.மீ., துாரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலை வழியாக பல்வேறு கிராமங்களுக்கு மக்கள் செல்கின்றனர்.
இந்த ஆறுவழிச்சாலையில், தண்டலம் பிரதான சாலை சந்திக்கிறது.
இங்கு, உயர்கோபுர மின்விளக்கு அமைக்காததால், இரவு நேரத்தில் இப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், விபத்து மற்றும் குற்றச் சம்பவங்கள் நடைபெறும் சூழலும் உள்ளது.
எனவே, வாகன ஓட்டிகளின் நலன் கருதி, தண்டலம் ஆறுவழிச்சாலை சந்திப்பில் உயர்கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.