/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருப்போரூர் கூட்டுச்சாலையில் உயர்கோபுர மின் விளக்கு அவசியம்
/
திருப்போரூர் கூட்டுச்சாலையில் உயர்கோபுர மின் விளக்கு அவசியம்
திருப்போரூர் கூட்டுச்சாலையில் உயர்கோபுர மின் விளக்கு அவசியம்
திருப்போரூர் கூட்டுச்சாலையில் உயர்கோபுர மின் விளக்கு அவசியம்
ADDED : ஏப் 01, 2025 11:21 PM

செங்கல்பட்டு:திருப்போரூர் கூட்டுச்சாலையில், உயர்கோபுர மின் விளக்கு பொருத்தி பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
செங்கல்பட்டு அடுத்த, வல்லம் ஊராட்சி பகுதியில், திருப்போரூர் கூட்டுச்சாலை உள்ளது. இச்சாலை வழியாக திருப்போரூர், திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு, அரசு மற்றும் தனியார் பேருந்துகள், பிற வாகனங்கள் சென்று வருகின்றன.
இப்பகுதியில், மின் விளக்கு இல்லாததால், இருள் சூழந்த பகுதியாக இருந்ததால், அடிக்கடி சாலை விபத்துகள் நடந்தது. இதை தவிர்க்க, உயர்கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும் என, நெடுஞ்சாலைத் துறைக்கு, கிராமவாசிகள் மனு அளித்தனர்.
அதன் பின், உயர்கோபுர மின் விளக்கை, நெடுஞ்சாலைத்துறை அமைத்து, பராமரித்து வந்தனர். இதற்கிடையில், திருப்போரூர் கூட்டுச்சாலையில் இருந்து, திருப்போரூர் வரை இருவழிச்சாலையை, நான்கு வழிச்சாலையாக மாற்றம் செய்த போது, உயர்கோபுர மின் விளக்கை, நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினர்.
அதன் பின், மின் விளக்கு இல்லாததால், இருள் சூழ்ந்து, சாலை விபத்துகள் அடிக்கடி ஏற்பட்டு, கடந்த மூன்று ஆண்டுகளில், 500 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
இப்பகுதயில், உயர்கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும் என, அமைச்சர் மற்றும் கலெக்டர் குறைதீர்க்கும் கூட்டங்களில், கிராமவாசிகள் மனு அளித்தனர்.
இதையடுத்து, உயர்கோபுர மின் கம்பத்தை மட்டும், கடந்த சில மாதங்களுக்கு முன், நெடுஞ்சாலைத் துறையினர் அமைத்தனர். ஆனால், மின் விளக்கு மட்டும் அமைக்கவில்லை.
பெரும் விபத்துகள் நடப்பதற்குள், உயர்கோபுர மின் கம்பத்தில் மின் விளக்கு பொருத்தி பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.

