/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
உயர் கோபுர மின் கம்பம் சாய்ந்து விழுந்து விபத்து
/
உயர் கோபுர மின் கம்பம் சாய்ந்து விழுந்து விபத்து
ADDED : அக் 18, 2024 01:13 AM

கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சி, பிரியா நகர் பிரதான சாலையில், உயர் கோபுர மின் கம்பம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த மின் கம்பத்தில், ஐந்து எல்.இ.டி., விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன.
அக்கம்பம் சற்று சாய்ந்து காணப்பட்ட நிலையில், அதை அகற்றக்கோரி அப்பகுதிவாசிகள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள், ஊராட்சி நிர்வாகத்திற்கும், மின்வாரிய அலுவலகத்திற்கும் புகார் அளித்தனர்.
மேலும், இது தொடர்பாக நம் நாளிதழில் செய்தி வெளியிட்டிருந்தோம். ஆனால், அதை அகற்றுவதற்கு துறை சார்ந்த அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது பெய்த தொடர் மழையின் காரணமாக, நேற்று முன்தினம் இரவு அந்த மின் கம்பம் சாய்ந்து, அருகில் உள்ள மரத்தில் விழுந்தது. அதில் உள்ள ஐந்து எல்.இ.டி., விளக்குகள் சேதமாகவில்லை. கம்பம், சாலையின் இடது புறமாக சாய்ந்ததால், அசம்பாவிதம் ஏதும் இல்லை