/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கோவிந்தாபுரம் டாஸ்மாக் பாரில் பதுக்கல் மது பாட்டில் பறிமுதல்
/
கோவிந்தாபுரம் டாஸ்மாக் பாரில் பதுக்கல் மது பாட்டில் பறிமுதல்
கோவிந்தாபுரம் டாஸ்மாக் பாரில் பதுக்கல் மது பாட்டில் பறிமுதல்
கோவிந்தாபுரம் டாஸ்மாக் பாரில் பதுக்கல் மது பாட்டில் பறிமுதல்
ADDED : நவ 17, 2024 09:56 PM
மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் அடுத்த கோவிந்தாபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை பாரில், இரவு நேரங்களில் மது விற்பனை செய்யப்படுவதாக, தாம்பரம் காவல் துணை கமிஷனர் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, கோவிந்தாபுரம் டாஸ்மாக் பாரில், போலீசார் சோதனை நடத்தினர். இதில், 44 பீர் பாட்டில்கள், 315 குவார்ட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக, பாரில் வேலை பார்த்து வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த செந்தில்குமரன், 46, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அபிஷேக், 22, மற்றும் சீனு, 22, உள்ளிட்டோரை, போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதே பாரில், கடந்த 10ம் தேதி, கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெறுவதாக வீடியோ வெளியாகி, மறைமலை நகர் போலீசார் சோதனை செய்தபோது, 8 மது பாட்டில்கள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டது.