/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தர்பூசணி பழத்தின் நிறம் குறித்து தோட்டக்கலை துறை விளக்கம்
/
தர்பூசணி பழத்தின் நிறம் குறித்து தோட்டக்கலை துறை விளக்கம்
தர்பூசணி பழத்தின் நிறம் குறித்து தோட்டக்கலை துறை விளக்கம்
தர்பூசணி பழத்தின் நிறம் குறித்து தோட்டக்கலை துறை விளக்கம்
ADDED : மார் 30, 2025 01:11 AM

பவுஞ்சூர்:செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் பகுதியில் தற்போது, 5,000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நாம்தாரி, விஷால், டிராகன், என்.எஸ் 295 உள்ளிட்ட பல்வேறு வகையான தர்பூசணி ரகங்கள் பயிரிடப்பட்டு உள்ளன.
ஜன., மாதத்தில் பயிரிடப்பட்ட தர்பூசணி தற்போது அறுவடைக்கு தயாராகி உள்ளது.
இந்நிலையில் சமூகவலைதளங்களில், விற்பனைக்காக வியாபாரிகள் ஊசி வாயிலாக தர்பூசணியில் சிவப்பு நிறம் கலப்படம் செய்வதாக, வீடியோக்கள் பரவி வருகின்றன.
இதனால், தர்பூசணி விலை வீழ்ச்சியடைந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இரண்டு வாரங்களுக்கு முன், டன் 12,000 ரூபாய்க்கு விற்று வந்த நிலையில், தற்போது 5,000 முதல் -7,000 வரை மட்டுமே விற்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று, செங்கல்பட்டு மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் மோகன் மற்றும் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள், வயல்வெளிகளில் நேரில் ஆய்வு செய்தனர்.
அப்போது, தர்பூசணியில் இயற்கையாகவே 'லைகோபின்' எனப்படும் இயற்கை மூலப்பொருள் உள்ளது. இதனால் சிவப்பு நிறத்தில் காணப்படுவதாக தெரிவித்தனர்.
மேலும், செடியில் இருந்து நேரடியாக அறுவடை செய்யப்படும் தர்பூசணியில், சிவப்பு நிற கரை படியும் என விளக்கம் அளித்தனர்.