/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செய்யூரில் ரூ.1.93 கோடியில் பள்ளி மாணவியருக்கு விடுதி
/
செய்யூரில் ரூ.1.93 கோடியில் பள்ளி மாணவியருக்கு விடுதி
செய்யூரில் ரூ.1.93 கோடியில் பள்ளி மாணவியருக்கு விடுதி
செய்யூரில் ரூ.1.93 கோடியில் பள்ளி மாணவியருக்கு விடுதி
ADDED : ஏப் 14, 2025 11:47 PM

செய்யூர், செய்யூரில், 1.93 கோடி ரூபாயில் கட்டப்பட்ட ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி மாணவியர் விடுதி, நேற்று துவக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்தது.
செய்யூர் பஜார் பகுதியில், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்படுகிறது.
இதில், செய்யூர் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவியர் ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படித்து வருகின்றனர்.
நீண்ட துாரத்தில் இருந்து வரும் மாணவியர் தங்கி படிக்க, பள்ளி அருகே 30 ஆண்டுகளுக்கு முன், ஆதிதிராவிடர் நல அரசு மாணவியர் விடுதி இருந்தது.
இதில், 30க்கும் மேற்பட்ட மாணவியர் தங்கி பயனடைந்து வந்த நிலையில், பராமரிப்பின்றி கட்டடம் நாளடைவில் பழுதடைந்தது.
இதனால், புதிய கட்டடம் அமைக்க முடிவு செய்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன் தனியார் கட்டடத்திற்கு இந்த விடுதி மாற்றப்பட்டு, பழைய கட்டடம் இடிக்கப்பட்டது.
'தாட்கோ' வாயிலாக, 1.93 கோடி மதிப்பீட்டில் புதிய விடுதி கட்டடம் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டன.
இரண்டு ஆண்டுகளாக கட்டுமானப் பணிகள் நடந்து வந்த நிலையில், பணிகள் முடிந்து நேற்று, இந்த மாணவியர் விடுதி துவக்கப்பட்டு, செயல்பாட்டிற்கு வந்தது.