/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஹோட்டல் ஊழியரை வெட்டி பணம் பறிப்பு
/
ஹோட்டல் ஊழியரை வெட்டி பணம் பறிப்பு
ADDED : அக் 14, 2024 06:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : சென்னை அடையாறு, கெனால் பேங்க் சாலையைச் சேர்ந்தவர் பெருமாள், 56; ஹோட்டலில் பணிபுரிகிறார். பணி முடித்து நேற்று அதிகாலை, வீடு நோக்கி நடந்து சென்றார்.
சம்பள பணம் 10,000 ரூபாயை, பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்தார். சர்தார் படேல் சாலையில் சென்ற போது, 'பைக்'கில் வந்த மூன்று பேர் அவரை வழிமறித்து பணம், மொபைல்போன் பறித்தனர்.
தடுக்க முயன்ற அவரது கையை, கத்தியால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதில் காயமடைந்த பெருமாள், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அடையாறு போலீசார், சம்பவம் நடந்த இடத்திலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.