/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வீட்டின் கதவை உடைத்து ரூ.3 லட்சம் பொருட்கள் திருட்டு
/
வீட்டின் கதவை உடைத்து ரூ.3 லட்சம் பொருட்கள் திருட்டு
வீட்டின் கதவை உடைத்து ரூ.3 லட்சம் பொருட்கள் திருட்டு
வீட்டின் கதவை உடைத்து ரூ.3 லட்சம் பொருட்கள் திருட்டு
ADDED : மே 17, 2025 10:10 PM
திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம், மேலையூர் ஊராட்சியில் அடங்கிய மாங்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் செல்வி, 48. கடந்த 20 நாட்களுக்கு முன் திருச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.
நேற்று காலை 6:00 மணிக்கு செல்வி வீட்டின் பின்பக்க கதவு திறந்திருந்தது. இதை அறிந்த பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் பக்கத்து தெருவில் வசிக்கும் செல்வி மகனுக்கு தகவல் தெரிவித்தனர்.
செல்வி மகன் பாலசுப்பிரமணி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த வெள்ளி கொலுசு, மோதிரம் 'டிவி' மிக்சி, கிரைண்டர், பாத்திரங்கள், வாட்டர் ஹீட்டர் உள்ளிட்ட 3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை போனது தெரிந்தது.
புகாரின்படி திருப்போரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.