/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நெடுங்குன்றம் ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம்
/
நெடுங்குன்றம் ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம்
ADDED : பிப் 14, 2024 11:18 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், நெடுங்குன்றம் ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம், நடந்தது.
கலெக்டர் அருண்ராஜ் தலைமை தாங்கினர். மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி முன்னிலை வகித்தார்.
காட்டாங்குளத்துார் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் உதயா, துணைத் தலைவர் ஆராவமுதன், வண்டலுார் தாசில்தார் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், 83.45 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, பயனாளிகளுக்கு கலெக்டர் அருண்ராஜ் வழங்கினார். அப்போது, கோரிக்கைகளை வலியுறுத்தி, 100க்கும் மேற்பட்டோர் கலெக்டரிடம் மனுக்களை வழங்கினர்.

