ADDED : அக் 04, 2024 08:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:அனந்தமங்கலம் கிராமத்தில், வரும் 9ம் தேதி மனுநீதி நாள் முகாம் நடக்கிறது என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:
மாதந்தோறும் நடத்தக்கூடிய மனுநீதி நாள் முகாம், செங்கல்பட்டு மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் ஊராட்சியில், மாதந்தோறும் நடைபெற்று வருகிறது.
அதன்படி, மதுராந்தகம் தாலுகாவில், அனந்தமங்கலம் கிராமத்தில், மனுநீதி நாள் முகாம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், வரும் 9ம் தேதி, புதன் கிழமை காலை 10:00 மணிக்கு நடக்கிறது.
இதில், அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளதால், பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.