/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை
/
சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை
ADDED : பிப் 07, 2025 09:10 PM
மாமல்லபுரம்:மாமல்லபுரம் சாலையோர வியாபாரிகளுக்கு, அடையாள அட்டை வழங்கப்பட்டது.
உள்ளாட்சி நிர்வாக பகுதிகளில் வாழ்வாதார தொழிலாக ஏராளமானோர் தள்ளுவண்டியில், நடைபாதையில் என, சாலையோரம் வியாபாரம் செய்கின்றனர்.
அவர்களை முறைப்படுத்துவது மத்திய, மாநில அரசுகள் சார்பில் வங்கி கடன் அளிப்பது, வியாபாரியின் குழந்தைகளின் கல்விக்கு உதவுவது உள்ளிட்ட சேவைகளுக்காக, அவர்களை பற்றிய விபரங்கள் சேகரிக்கப்பட்டு, பிரதம மந்திரியின் ஆத்ம நிர்பார் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டன.
மாமல்லபுரத்தில் அவ்வாறு பதிவு செய்துள்ள 361 பேருக்கு, பேரூராட்சி நிர்வாகம் சார்பில், தற்போது அடையாள அட்டை, சான்றிதழ் ஆகியவை, நேற்று வழங்கப்பட்டன. பேரூராட்சி மன்றத்தினர் வழங்கினர்.