/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளத்தனமாக மதுவிற்பனை ஜோர்
/
செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளத்தனமாக மதுவிற்பனை ஜோர்
செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளத்தனமாக மதுவிற்பனை ஜோர்
செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளத்தனமாக மதுவிற்பனை ஜோர்
ADDED : ஆக 05, 2025 11:24 PM
மறைமலை நகர்:செங்கல்பட்டு மாவட்டத்தில், கள்ளத்தனமாக நடக்கும் மது விற்பனையை தடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய பகுதிகளில், 49 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.
செங்கல்பட்டு புறநகர் பகுதிகளில் மறைமலை நகர், கூடுவாஞ்சேரி, வண்டலுார் உள்ளிட்ட பகுதிகளில், 25 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த டாஸ்மாக் கடைகளின் அருகில், அரசு அனுமதியுடன் மதுக்கூடங்கள் இயங்கி வருகின்றன. டாஸ்மாக் கடை பகல் 12:00 மணிக்கு திறந்து, இரவு 10:00 மணிக்கு மூடப்படுகிறது. ஆனால், இரவு கடையை மூடிய பின், மறுநாள் கடை திறக்கும் வரை, மதுக்கூடங்களில் கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு மது விற்கப்படுகின்றன.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
டாஸ்மாக்கில் 150 ரூபாய்க்கு விற்கப்படும் 'குவார்ட்டர்' மதுபாட்டில், 250 முதல் 300 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
குறிப்பாக, சிங்கபெருமாள் கோவில் ஜி.எஸ்.டி., சாலை மேம்பாலம் அருகில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை, கடந்தாண்டு மூடப்பட்ட நிலையில், அந்த இடத்தில் தற்போது சட்டவிரோதமாக, 24 மணி நேரமும் மது விற்பனை நடக்கிறது.
இங்கு குடிமகன்களை கவர டம்ளர், குடிநீர், மாங்காய் சுண்டல், ஊறுகாய், பழத் துண்டுகள், மீன் குழம்பு உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படுகின்றன.
இதனால் அங்கு, எப்போதும் மதுபிரியர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
காவல் துறையினர், மாதந்தோறும் மாமூல் மற்றும் கணக்கு காண்பிக்க வழக்கு பதிவு செய்து விட்டு, கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
இந்த கள்ளத்தனமான மது விற்பனை, மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கூடங்களிலும் நடந்து வருகிறது. எனவே, சட்டவிரோத மது விற்பனையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.