/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஒளிரும் 3 அடுக்கு வேகத்தடுப்பு ஓ.எம்.ஆர்., சாலையில் அமைப்பு
/
ஒளிரும் 3 அடுக்கு வேகத்தடுப்பு ஓ.எம்.ஆர்., சாலையில் அமைப்பு
ஒளிரும் 3 அடுக்கு வேகத்தடுப்பு ஓ.எம்.ஆர்., சாலையில் அமைப்பு
ஒளிரும் 3 அடுக்கு வேகத்தடுப்பு ஓ.எம்.ஆர்., சாலையில் அமைப்பு
ADDED : ஏப் 10, 2025 02:14 AM

திருப்போரூர்:திருப்போரூர் அருகே ஓ.எம்.ஆர்., சாலையில் விபத்துகளை தடுக்கவும், சோதனை மேற்கொள்ளவும், ஒளிரும் வேகத்தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து பூஞ்சேரி வரை ஓ.எம்.ஆர்., சாலை உள்ளது. இந்த சாலையில் தினந்தோறும் ஏராளமான வாகனங்கள், மாமல்லபுரம் நோக்கிச் செல்கின்றன.
மேலும், சோழிங்கநல்லுார், கேளம்பாக்கம், திருப்போரூர் ஆகிய இடங்களில் ஓ.எம்.ஆர்., மற்றும் இ.சி.ஆர்., சாலைகளை இணைக்கும் இணைப்பு சலைகள் செல்கின்றன. தவிர, பல்வேறு முக்கிய சாலைகள் பிரிந்து செல்கின்றன.
இந்நிலையில், திருப்போரூர் அருகே கோமாநகர் - ஓ.எம்.ஆர்., சாலை இணையும் பகுதியில், கேளம்பாக்கம் போலீசார் புதிதாக போக்குவரத்து சோதனைச்சாவடி மற்றும் மின்விளக்கு பொருத்திய ஒளிரும் மூன்று அடுக்கு வேகத்தடுப்புகள் அமைத்துள்ளனர்.
இந்த வேகத்தடுப்பில் மின்விளக்கு ஒளிரும் வகையில் பொருத்தப்பட்டு உள்ளதால், 500 மீட்டர் துாரத்திற்கு முன்பாக சாலைத் தடுப்புகள் இருப்பது வாகன ஓட்டிகளின் கண்களுக்கு நன்கு தெரியும்.
அதனால் வேகத்தைக் குறைத்து செல்கின்றனர்.
அதே நேரத்தில், மாலையில் சில நேரங்களில் வாகன போக்குவரத்து அதிகரிக்கும் போது, மூன்று அடுக்கு வேகத்தடுப்பால் 500 மீட்டர் துாரத்திற்கு வாகனங்கள் தேங்கி ஊர்ந்து சென்று, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.
எனவே, ஒரு அடுக்கு வேகத்தடை அமைத்து, போலீசார் வாகன போக்குவரத்தை கண்காணிக்கலாம் என, பொதுமக்களிடையே கருத்து எழுந்துள்ளது.

