/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அ.தி.மு.க.,வில் விரைவில் அமைப்பு தேர்தல் அடையாள அட்டை ஒப்படைக்க அறிவுரை
/
அ.தி.மு.க.,வில் விரைவில் அமைப்பு தேர்தல் அடையாள அட்டை ஒப்படைக்க அறிவுரை
அ.தி.மு.க.,வில் விரைவில் அமைப்பு தேர்தல் அடையாள அட்டை ஒப்படைக்க அறிவுரை
அ.தி.மு.க.,வில் விரைவில் அமைப்பு தேர்தல் அடையாள அட்டை ஒப்படைக்க அறிவுரை
ADDED : அக் 28, 2024 11:38 PM
மாமல்லபுரம் : திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., வளர்ச்சி ஆலோசனை மற்றும் செயல்வீரர்கள் கூட்டம், மாமல்லபுரத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
அக்கட்சியின் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலர் ஆறுமுகம், கிழக்கு ஒன்றிய செயலர் ராகவன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று, ஆலோசனைகள் தெரிவித்தனர்.
இதில், அ.தி.மு.க.,வின் அமைப்பு செயலரும், முன்னாள் அமைச்சருமான பெஞ்சமின் பேசியதாவது:
முன்னாள் முதல்வர்களும், அ.தி.மு.க., பொதுச்செயலருமான எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா ஆகியோர் பொறுப்பில், கட்சியில் இருந்த உறுப்பினர்களைவிட, இப்போது இரண்டு கோடி பேருக்கும் அதிகமாக உள்ளனர்.
முன்பு கட்சி தேர்தலில் போட்டியிடும் நிர்வாகிகள், உறுப்பினர்களிடம் அடையாள அட்டையை ஒப்படைக்காமல், தாங்களே வைத்திருந்தனர். அதுபோன்ற நிலை இன்று இல்லை.
பொதுச்செயலர் பழனிசாமி கையொப்பமிட்ட உறுப்பினர் அடையாள அட்டை அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
அவற்றை கட்டாயம் உறுப்பினர்களிடம் ஒப்படைக்குமாறு நிர்வாகிகளிடமும், பொதுச்செயலர் உத்தரவிட்டுள்ளார். இந்த அட்டையே உறுப்பினருக்கான ஆதாரம். கட்சி அமைப்பு தேர்தல், விரைவில் நடத்தப்பட உள்ளது. அடையாள அட்டையை அவசியம் ஒப்படையுங்கள்.
வரும் சட்டசபை தேர்தலில், உறுப்பினர்கள் தவறாமல் ஓட்டு அளித்தாலே நாம் வெற்றி பெறலாம். தி.மு.க., அரசு, பெண்களுக்கு 1,000 ரூபாய் வழங்குகிறது. இது திட்டமே அல்ல.
சொத்துவரி போன்ற வரிகளை உயர்த்தி, அதைத் தான் வழங்குகிறது. நாம் செயல்படுத்திய தாலிக்கு தங்கம் உள்ளிட்ட திட்டங்களையும், இந்த அரசு நிறுத்திவிட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.

