/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'உழவரை தேடி - வேளாண்மை' செங்கையில் இன்று முகாம்
/
'உழவரை தேடி - வேளாண்மை' செங்கையில் இன்று முகாம்
ADDED : ஜூன் 12, 2025 11:05 PM
செங்கல்பட்டு,:செங்கல்பட்டு மாவட்டத்தில், 'உழவரைத் தேடி - வேளாண்மை திட்டம்' இன்று நடக்கிறது.
இதுகுறித்து, வேளாண்மை இணை இயக்குனர் பிரேம் சாந்தி அறிக்கை:
உழவரைத்தேடி - வேளாண்மை திட்டம், 15 நாட்களுக்கு ஒரு முறை, இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில்,
வட்டாரங்களில் உள்ள கிராமங்களில் நடத்தப்பட உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் வட்டாரத்தில் அச்சிறுபாக்கம், முருங்கை, மதுராந்தகம் வட்டாரத்தில் அமையம்பட்டு, நல்லுார், சித்தாமூர் வட்டாரத்தில் ஆலம்பரை, புலியணி
* பவுஞ்சூர் வட்டாரத்தில் அம்மனுார், நெல்வாய்பாளையம், திருக்கழுக்குன்றம் வட்டாரத்தில் மங்கலம், வெள்ளப்பந்தல்
* திருப்போரூர் வட்டாரத்தில் ஆலத்துார், நெம்மேலி, காட்டாங்கொளத்துார் வட்டாரத்தில் பெரியபுத்தேரி, கல்வாய் நெம்மேலி
* சிட்லபாக்கம் வட்டாரத்தில் கோவிலாஞ்சேரி, மதுரப்பாக்கம்.
மேற்கண்ட கிராமங்களில், உழவரைத் தேடி - வேளாண்மை திட்ட முகாம், இன்று நடக்கிறது. இக்கூட்டத்தில், விவசாயிகள் பங்கேற்று பயனடையலாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.