/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் சிறுமியர் திருமணம், கர்ப்பம் அதிகரிப்பு... அதிர்ச்சி!: மூன்று ஆண்டுகளில் 800க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
/
செங்கையில் சிறுமியர் திருமணம், கர்ப்பம் அதிகரிப்பு... அதிர்ச்சி!: மூன்று ஆண்டுகளில் 800க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
செங்கையில் சிறுமியர் திருமணம், கர்ப்பம் அதிகரிப்பு... அதிர்ச்சி!: மூன்று ஆண்டுகளில் 800க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
செங்கையில் சிறுமியர் திருமணம், கர்ப்பம் அதிகரிப்பு... அதிர்ச்சி!: மூன்று ஆண்டுகளில் 800க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
ADDED : செப் 11, 2024 12:46 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், குழந்தை திருமணங்கள், பாலியல் வன்கொடுயால் கர்ப்பம் உள்ளிட்டவற்றால், கடந்த இரண்டரை ஆண்டுகளில், 800க்கும் மேற்பட்ட சிறுமியர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இப்பாதிப்புகளை தவிர்க்கவும் கட்டுப்படுத்தவும், அனைத்து பள்ளிகளிலும், கிராமங்களிலும், சிறுமியருக்கு பாலியல்ரீதியாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள எட்டு ஊராட்சி ஒன்றியங்களில், 359 ஊராட்சிகள் உள்ளன. மாவட்டத்தில், பிரதான தொழில் விவசாயம், கால்நடை வளர்ப்பில் பெரும்பாலானோர் ஈடுபட்டு வருகின்றனர்.
அவை மட்டுமின்றி, சென்னையொட்டி உள்ளதால், மகேந்திரா வேர்ல்டு சிட்டி, மறைமலை நகர், திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கும், இளம்பெண்கள் வேலைக்கு செல்கின்றனர்.
அதனால், வீட்டில் உள்ள பெரியவர்களின் பொறுப்பில் பெண் குழந்தைகளை ஒப்படைத்துச் செல்வதும், மிகச்சிறு வயதிலேயே பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பதும், கிராமப் பகுதிகளில் அதிக அளவில் நடக்கிறது.
வீட்டில் தனியாக இருக்கும் பெண் குழந்தைகள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகள், சமூக விரோத கும்பலால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.
இதில், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர், அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் புகார் அளிக்கின்றனர். இருப்பினும், குற்ற வழக்காக முதல் தகவல் அறிக்கை பதியப்படுவது மிகக்குறைவாகவே உள்ளது.
மத்திய, மாநில அரசுகள், பெண் குழந்தைகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கி வருகின்றன. குழந்தை திருமணம் மற்றும் பாலியல்ரீதியாக பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு, சமூக நலத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகிய அமைப்பினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
மாவட்டத்தில், 2022- - 23ம் ஆண்டு, 431 சிறுமியரும், 2023- - 24ம் ஆண்டு 277 சிறுமியரும், கடந்த ஜூலை மாதம் வரை, 111 குழந்தைகள் என, 819 குழந்தைகள் பாலியல்ரீதியாகவும், குழந்தை திருமணத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், 2022- - 23ம் ஆண்டில், குழந்தை திருமணம் குறித்து வந்த 27 புகார்களில், ஆறு வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு உள்ளன.
அதேபோல், 2023- - 24ம் ஆண்டில் வந்த 17 புகார்களில், நான்கு வழக்குகளும், இந்தாண்டு ஜூலை மாதம் வரை 19 புகார்களில், மூன்று வழக்குகளும் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.
மாவட்டத்தில், 63 குழந்தை திருமணங்கள் நடந்ததில், 13 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. மற்ற புகார்கள் மீது, சமூக நலத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
சமூக நலத்துறை மற்றும் சமூக பாதுகாப்பு அலகு சார்பில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும், கிராமங்களிலும், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள பெண் குழந்தைகளுக்கு, 'எனக்குள் நான்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக, கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.