/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருப்போரூரில் மழைநீர் வடிகால் துார்வாரி சீரமைக்கும் பணி தீவிரம்
/
திருப்போரூரில் மழைநீர் வடிகால் துார்வாரி சீரமைக்கும் பணி தீவிரம்
திருப்போரூரில் மழைநீர் வடிகால் துார்வாரி சீரமைக்கும் பணி தீவிரம்
திருப்போரூரில் மழைநீர் வடிகால் துார்வாரி சீரமைக்கும் பணி தீவிரம்
ADDED : செப் 25, 2024 12:16 AM

திருப்போரூர்:திருப்போரூரில் இருந்து கேளம்பாக்கம் வரை, 8 கி.மீ., துாரம் சாலை உள்ளது. இதற்கு இடைப்பட்ட பகுதியில் தான் தையூர் ஏரி உள்ளது.
மழை காலங்களில் தையூர் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து வெளியேறும் மழைநீர், பல்வேறு கால்வாய்கள் வழியாக, ஓ.எம்.ஆர்., சாலையை கடந்து, பக்கிங்காம் கால்வாயில் சென்று, பின் கோவளம் அருகே கடலில் கலக்கிறது.
இந்நிலையில், மேற்கண்ட கால்வாய்களில் முட்செடிகள் வளர்ந்து துார்ந்து இருந்தன. இதனால், பருவ மழையில் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும் சூழல் இருந்தது.
எனவே, பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வடிகால்வாய்களை துார்வாரி சீரமைக்க, நீர்வளத்துறை முடிவு செய்தது.
அதன்படி, தையூர் ஏரியின் முக்கிய வடிகால்வாய்கள் செல்லும் ஓ.எம்.ஆர்., சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில், பொக்லைன் இயந்திரம் வாயிலாக துார் வாரும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.