/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பேரூராட்சியில் தூய்மை பணி வாகனங்கள் துவக்கி வைப்பு
/
பேரூராட்சியில் தூய்மை பணி வாகனங்கள் துவக்கி வைப்பு
பேரூராட்சியில் தூய்மை பணி வாகனங்கள் துவக்கி வைப்பு
பேரூராட்சியில் தூய்மை பணி வாகனங்கள் துவக்கி வைப்பு
ADDED : அக் 27, 2024 01:00 AM

திருப்போரூர்:திருப்போரூர் பேரூராட்சியில், 30,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை வாகனங்கள் வாயிலாக தினமும் குப்பை சேகரிக்கப்படுகிறது.
மேலும், பேரூராட்சி பகுதியில் ஆங்காங்கே குப்பை தேங்காதவாறு, அவற்றை எடுத்து செல்ல தற்போது திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், 25 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒரு தூய்மை லாரி, இரண்டு மினி லோடு வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. இதன் தொடக்க விழா பேரூராட்சி வளாகத்தில் நேற்று நடந்தது.
திருப்போரூர் எம்.எல்.ஏ., பாலாஜி, ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன், பேரூராட்சி தலைவர் தேவராஜ் ஆகியோர் கொடியசைத்து தூய்மை வாகன இயக்கத்தை துவக்கி வைத்தனர்.