/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை புறநகரில் விபத்து அதிகரிப்பு இரவு கடைகளுக்கு கட்டுப்பாடு வருமா?
/
செங்கை புறநகரில் விபத்து அதிகரிப்பு இரவு கடைகளுக்கு கட்டுப்பாடு வருமா?
செங்கை புறநகரில் விபத்து அதிகரிப்பு இரவு கடைகளுக்கு கட்டுப்பாடு வருமா?
செங்கை புறநகரில் விபத்து அதிகரிப்பு இரவு கடைகளுக்கு கட்டுப்பாடு வருமா?
ADDED : ஜன 13, 2025 11:42 PM
மறைமலைநகர செங்கல்பட்டு புறநகர் பகுதிகளான சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், பொத்தேரி, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலுார் உள்ளிட்ட பகுதிகளில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து, பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் வாடகைக்கு தங்கியுள்ளனர்.
இவர்கள் மகேந்திரா சிட்டி, மறைமலைநகர், ஒரகடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தனியார் கல்லுாரி மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த பகுதிகளில் இரவு நேரங்களில் பல இடங்களில் இரவு நேர உணவகங்கள், டீ கடைகள், பிரியாணி கடைகள் திறந்து உள்ளன.
இதனால், இரவு நேரங்களில் நீண்ட துாரம் இருசக்கர வாகனங்களில் பயணித்து பிரியாணி சாப்பிடுவது, டீ குடிப்பது போன்ற கலாசாரம் தற்போது அதிகரித்து உள்ளது.
இவ்வாறு நெடுஞ்சாலையில் வேகமாக செல்லும் வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.
கடந்த மாதம், நள்ளிரவில் டீ குடிக்க, இருசக்கர வாகனத்தில், நண்பர்கள் இரு சக்கர வாகனங்களில் கூட்டமாக சென்ற போது, இருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
இதுபோன்ற சம்பவங்களை தடுக்க, இரவு நேரத்தில் இயங்கும் கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:
சமீப காலமாக, பெருங்களத்துார் முதல் செங்கல்பட்டு வரை உள்ள பகுதிகளில், பல்வேறு இடங்களில் இரவு ஹோட்டல்கள், சாலையோர தள்ளுவண்டி கடைகள், டீ கடைகள் என, இரவு முழுதும் கடைகள் செயல்படுகின்றன.
ரோந்து செல்லும் போலீசார் சந்தேகப்படும் வகையில் செல்லும் நபர்கள், இந்த பகுதியில் புதிதாக உள்ள நபர்களிடம் விசாரணை நடத்தும் போது, டீ கடை மற்றும் உணவகங்களுக்கு செல்வதாக கூறிவிட்டுச் செல்கின்றனர்.
வழிப்பறி சம்பவத்திற்குப் பிறகு பிடிபடும் நபர்கள் பெரும்பாலும், இவர்களாகவே உள்ளனர். புறநகர் பகுதிகளில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், புதிய புதிய நபர்கள் வந்து செல்கின்றனர்.
பழைய குற்றவாளிகளை போலீசாருக்கு அடையாளம் தெரிவதால், ரோந்து பணியில் உள்ள போலீசார் அவர்களால் ஏற்படும் குற்றங்களை தடுக்கின்றனர். புதியவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடும் போது, அவர்களை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
அதே போல இளைஞர்கள் பலர் வண்டலுாரில் இருந்து இரவு நேரங்களில் மறைமலைநகர், சிங்கபெருமாள் கோவில், பரனுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு டீ குடிக்கவும், பிரியாணி சாப்பிடவும் செல்கின்றனர்.
தற்போது ஜி.எஸ்.டி., சாலையில் பல இடங்களில் விரிவாக்க பணிகள் நடைபெறுவதால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு, பலர் உயிரிழக்கின்றனர்.
எனவே, இரவு நேர கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், குற்றங்கள் மற்றும் விபத்துக்கள் குறைய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.