/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விளம்பர பேனர்கள் அதிகரிப்பு நகராட்சி அதிகாரிகள் அலட்சியம்
/
விளம்பர பேனர்கள் அதிகரிப்பு நகராட்சி அதிகாரிகள் அலட்சியம்
விளம்பர பேனர்கள் அதிகரிப்பு நகராட்சி அதிகாரிகள் அலட்சியம்
விளம்பர பேனர்கள் அதிகரிப்பு நகராட்சி அதிகாரிகள் அலட்சியம்
ADDED : செப் 20, 2025 02:00 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு நகரில், அனுமதியின்றி பேனர்கள் வைப்பது அதிகரித்து வரும் நிலையில், அவற்றை அகற்ற வேண்டிய அதிகாரிகள் மெத்தனமாக உள்ளதாக, வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
செங்கல்பட்டு நகரில், பழைய பேருந்து நிலையம் பகுதியில், போக்குவரத்து அதிகம் இருக்கும். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இப்பகுதியில் பயணியர் நிழற்குடையை மறைத்து, அதிக அளவில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன.
குறிப்பாக, கடந்த சில மாதங்களாக, பேனர் கலாசாரம் மீண்டும் உச்சகட்டத்தை எட்டி உள்ளது.
அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, கட்சி பிரமுகர் திருமண நிகழ்ச்சி, பிறந்தநாள் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்பாக வைக்கப்படும் விளம்பர பேனர்கள் அதிகரித்து வருகின்றன.
உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களின் உத்தரவை அலட்சியப்படுத்தி, அரசியல் கட்சியினர் மட்டுமின்றி, பொதுமக்களும் போட்டி போட்டு பேனர்கள் வைத்து வருகின்றனர்.
இதனால், பேருந்திற்காக காத்திருக்கும் பயணியர், இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது.
இதேபோன்று, செங்கல்பட்டு ராட்டிணங்கிணறு ரயில்வே மேம்பாலம் நுழைவாயில் பகுதியிலும், பெரிய அளவிலான விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன.
வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் இந்த பேனர்களை அகற்ற வேண்டிய உள்ளாட்சி நிர்வாகம், கண்டும் காணாமல் உள்ளது.
பெரும் விபத்து ஏற்படும் முன், இந்த பேனர்களை அகற்ற, நகராட்சி நிர்வாகம், சப் - கலெக்டர், போலீசார் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.