/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இந்திய நாட்டிய விழா வரும் 21ல் துவக்கம்
/
இந்திய நாட்டிய விழா வரும் 21ல் துவக்கம்
ADDED : டிச 13, 2025 05:30 AM
மாமல்லபுரம்: இந்திய நாட்டிய விழா, மாமல்லபுரத்தில் வரும் 21ம் தேதி துவங்கி, ஜன., 19ம் தேதி வரை நடைபெற உள்ளது.
மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால சிற்பங்களைக் காண, ஆண்டு இறுதியில் சர்வதேச பயணியர் சுற்றுலா வருகின்றனர்.
இந்திய பாரம்பரிய கலைகள் மீதான அவர்களின் ஆர்வம் கருதி, தமிழக சுற்றுலாத்துறை, இந்திய சுற்றுலாத் துறையுடன் இணைந்து, இங்கு ஆண்டுதோறும் இந்திய நாட்டிய விழா நடத்துகிறது. தற்போதைய விழாவிற்காக தமிழகம், பிற மாநில பாரம்பரிய, நாட்டுப்புற கலைக்குழுக்களை அத்துறை தேர்வு செய்துள்ளது.
இவ்விழா, வரும் 21ம் தேதி முதல், ஜன., 19ம் தேதி வரை நடைபெறுகிறது.
சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் ஆகியோர் துவக்கி வைப்பதாக, சுற்றுலாத் துறையினர் தெரிவித்து உள்ளனர்.

