/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாநில கலைத்திருவிழா போட்டி திருக்கழுக்குன்றம் மாணவி இரண்டாமிடம்
/
மாநில கலைத்திருவிழா போட்டி திருக்கழுக்குன்றம் மாணவி இரண்டாமிடம்
மாநில கலைத்திருவிழா போட்டி திருக்கழுக்குன்றம் மாணவி இரண்டாமிடம்
மாநில கலைத்திருவிழா போட்டி திருக்கழுக்குன்றம் மாணவி இரண்டாமிடம்
ADDED : டிச 13, 2025 05:32 AM

திருக்கழுக்குன்றம்: பள்ளிகள் இடையே, மாநில அளவில் நடந்த கலைத் திருவிழா போட்டியில், திருக்கழுக்குன்றம் அரசுப் பள்ளி மாணவி இரண்டாமிடம் வென்றார்.
பள்ளிக் கல்வித்துறை சார்பில், பள்ளிகள் இடையே கலைத் திருவிழா போட்டிகள் வட்டாரம், மாவட்டம், இறுதியாக மாநில அளவில் நடத்தப்பட்டன.
செங்கல்பட்டு மாவட்ட அளவில் நடந்த, காய்கறிகளில் கைவினை அலங்கார போட்டியில், திருக்கழுக்குன்றம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின், 10ம் வகுப்பு மாணவி உஷாராணி வெற்றி பெற்றார்.
இவர், ஆசிரியை உமா மேற்பார்வையில், கடந்த நவம்பரில் சேலத்தில் நடந்த மாநில அளவிலான போட்டியில் பங்கேற்றார்.
இதில், 38 மாணவியர் பங்கேற்ற நிலையில், உஷாராணி இரண்டாமிடம் பெற்றுள்ளார்.
இதையடுத்து தலைமையாசிரியை காயத்ரி, பேரூராட்சித் தலைவர் யுவராஜ் உள்ளிட்டோர் பாராட்டி பரிசளித்து உள்ளனர்.