/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பழையனுாரில் அங்கன்வாடி பயன்பாட்டிற்கு திறப்பு
/
பழையனுாரில் அங்கன்வாடி பயன்பாட்டிற்கு திறப்பு
ADDED : டிச 13, 2025 05:33 AM

மதுராந்தகம்: படாளம் அருகே பழையனுாரில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடம், நேற்று பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பழையனுார் ஊராட்சியில், 25 ஆண்டுகளுக்கு முன், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அருகே, அங்கன்வாடி கட்டப்பட்டு செயல்பட்டு வந்தது.
இந்த கட்டடம் சேதமடைந்ததால், அங்கன்வாடிக்கு புதிய கட்டடம் கட்டித் தர வேண்டுமென, கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ், 2023 -- 24ல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 14.31 லட்சம் ரூபாய் மதிப்பில் அங்கன்வாடிக்கு கட்டடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா, நேற்று நடந்தது.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் திறந்து வைத்தார். இதில், மாவட்ட கலெக்டர் சினேகா, ஊராட்சி தலைவர் அனிதா, அங்கன்வாடி பணியாளர் வாசுகி மற்றும் மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
இதே போல், பூதுார் ஊராட்சியில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடமும், பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

