/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பயன்பாடின்றி சேதமான நடைமேம்பாலம் அப்புறப்படுத்த வாகன ஓட்டிகள் கோரிக்கை
/
பயன்பாடின்றி சேதமான நடைமேம்பாலம் அப்புறப்படுத்த வாகன ஓட்டிகள் கோரிக்கை
பயன்பாடின்றி சேதமான நடைமேம்பாலம் அப்புறப்படுத்த வாகன ஓட்டிகள் கோரிக்கை
பயன்பாடின்றி சேதமான நடைமேம்பாலம் அப்புறப்படுத்த வாகன ஓட்டிகள் கோரிக்கை
ADDED : டிச 13, 2025 05:34 AM

அச்சிறுபாக்கம்,:அச்சிறுபாக்கத்தில், பயன்பாடின்றி உள்ள இரும்பு நடைபாதை மேம்பாலத்தை அப்புறப்படுத்த வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அச்சிறுபாக்கத்தில், சென்னை- - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள், வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.
இப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி மாணவ -- மாணவியர் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்கும் போது, அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டன.
இதை தவிர்க்கும் விதமாக, சில ஆண்டுகளுக்கு முன், இரும்பு நடைமேம்பாலம் அமைக்கப்பட்டு, மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
கடந்த 2022ம் ஆண்டு, 'மாண்டஸ்' புயலின் காரணமாக, இந்த நடைமேம்பாலத்தில் பொருத்தப்பட்டிருந்த பிளாஸ்டிக் கூரை முற்றிலும் சேதமானது.
உடைந்த கூரை, விபத்து ஏற்படுத்தும் வகையில் தொங்கியதால், நெடுஞ்சாலையில் பயணித்த வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வந்தனர்.
இதையடுத்து, கடந்த 2023ம் ஆண்டு, இரும்பு நடைபாதையில் உடைந்து தொங்கிய பிளாஸ்டிக் கூரை முழுதுமாக அகற்றப்பட்டது.
இதனால், இரும்பு நடைமேம்பாலம் திறந்தவெளியில் இருந்ததால் கடுமையாக சேதமடைந்தது.
கூரை அகற்றப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும், தற்போது வரை நடைமேம்பாலத்தை சீரமைக்க, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் நடைமேம்பாலம் தற்போது துருப்பிடித்து, எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது.
இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.
எனவே, இப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலன் கருதி, இந்த இரும்பு நடைமேம்பாலத்தை அப்புறப்படுத்த வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

