/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விதிகளை மீறி கன்டெய்னரில் ஏற்றிச் சென்ற 42 மாடுகள் மீட்பு
/
விதிகளை மீறி கன்டெய்னரில் ஏற்றிச் சென்ற 42 மாடுகள் மீட்பு
விதிகளை மீறி கன்டெய்னரில் ஏற்றிச் சென்ற 42 மாடுகள் மீட்பு
விதிகளை மீறி கன்டெய்னரில் ஏற்றிச் சென்ற 42 மாடுகள் மீட்பு
ADDED : டிச 13, 2025 05:35 AM

செங்கல்பட்டு:பரனுார் சுங்கச்சாவடி அருகே, கன்டெய்னர் லாரியில் விதிகளை மீறி ஏற்றிச் செல்லப்பட்ட, 42 மாடுகளை, போலீசார் மீட்டனர்.
ஆந்திர மாநிலம் நாயுடுப்பேட்டையில் இருந்து பொள்ளாச்சி சந்தைக்கு, கன்டெய்னர் லாரியில் மாடுகள் கடத்தப்படுவதாக, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த விலங்கு நல ஆர்வலர் விக்னேஷ், 25, என்பவருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் மற்றும் விலங்கு நல ஆர்வலர் இணைந்து, பரனுார் சுங்கச்சாவடியில் கன்டெய்னர் லாரியை மடக்கி சோதனை செய்தனர்.
இதில், விதிகளை மீறி ஒரே கன்டெய்னரில், 42 மாடுகளை அடைத்து ஏற்றிச் சென்றது தெரிந்தது.
இதையடுத்து, லாரியில் இருந்த மாடுகளை மீட்ட போலீசார், செங்கல்பட்டு அடுத்த மேலேரிப்பாக்கம் பகுதியில் உள்ள கோசாலையில் ஒப் படைத்தனர்.
இதுகுறித்து, போலீசார் மேலும் விசாரிக்கின்றனர்.