/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
டிரான்ஸ்பார்மரை தாங்கி நிற்கும் மின்கம்பங்கள் பழுதால் அச்சம்
/
டிரான்ஸ்பார்மரை தாங்கி நிற்கும் மின்கம்பங்கள் பழுதால் அச்சம்
டிரான்ஸ்பார்மரை தாங்கி நிற்கும் மின்கம்பங்கள் பழுதால் அச்சம்
டிரான்ஸ்பார்மரை தாங்கி நிற்கும் மின்கம்பங்கள் பழுதால் அச்சம்
ADDED : டிச 13, 2025 05:36 AM

செய்யூர்: வேட்டூர் கிராமத்தில், மின்மாற்றியை தாங்கி நிற்கும் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
செய்யூர் அருகே வேட்டூர் கிராமத்தில், 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
வேட்டூர் - நீர்ப்பெயர் செல்லும் சாலையோரத்தில், உயரழுத்த மின்மாற்றி உள்ளது.
இதன் மூலமாக, இந்த கிராம வயல்வெளியில் உள்ள மின்மோட்டார்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த மின்மாற்றியை தாங்கி நிற்கும் மின் கம்பங்கள் சேதமடைந்து, கான்கிரீட் பூச்சு பெயர்ந்து உள்ளது.
அதில் உள்ள இரும்புக் கம்பிகள் துருப்பிடித்து, பலத்த காற்று வீசினால் மின்மாற்றி சாய்ந்து விழும் நிலையில் உள்ளது.
எதிர்பாராத விதமாக மின் கம்பங்கள் முறிந்து விபத்து ஏற்பட்டால், பெரும் பாதிப்பு ஏற்படும்.
எனவே, மின்வாரிய அதிகாரிகள் இங்கு ஆய்வு செய்து, விபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ள சேதமான மின்கம்பங்களை அகற்ற வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

