/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தொழில் நிறுவனங்கள் உத்யம் பதிவுக்கு அழைப்பு
/
தொழில் நிறுவனங்கள் உத்யம் பதிவுக்கு அழைப்பு
ADDED : டிச 04, 2024 11:16 PM
செங்கல்பட்டு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், 'உத்யம்' பதிவு செய்து கொள்ளலாம்.
கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:
இந்திய அரசின் 2020ம் ஆண்டு அறிக்கையின் தொழில் நிறுவனங்களின் முதலீடு மற்றும் விற்பனை வருவாய்களின் அடிப்படையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களாக வகைப்படுத்தப்படுகின்றன.
தொழில் நிறுவனங்கள் உத்யம் பதிவுச்சான்றிதழ் பெறுவதன் வாயிலாக, நிறுவனத்தை நிரந்தரமாக அரசு அங்கீகாரத்துடன் பதிவு செய்து கொள்ளலாம். பதிவுச்சான்றிதழ் பெற விரும்பும் தொழில் முனைவோர் ஆதார், பான்கார்டு ஆகியவற்றுடன் udyamregistration.gov.in என்ற இணையதளத்தில் நிறுவனத்தை பதிவு செய்து, சான்றிதழ் பெறலாம். மேலும் விவரங்களுக்கு, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட தொழில் மையத்தை அணுகலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.