/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தீயணைப்பு நிலையம் கட்ட ஆரம்பகட்ட பணி துவக்கம்
/
தீயணைப்பு நிலையம் கட்ட ஆரம்பகட்ட பணி துவக்கம்
ADDED : ஆக 07, 2025 01:36 AM

திருப்போரூர்:திருப்போரூர் தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்ட, ஆரம்பகட்ட பணிகள் துவங்கியுள்ளன.
திருப்போரூர் பேரூராட்சி, காலவாக்கம் கிராமத்தில், மாநில தீயணைப்பு பயிற்சி மையம் ஏற்படுத்த, 15 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டது.
இதில் ஒரு பகுதி இடத்தில், 2023ம் ஆண்டு, திருப்போரூர் தீயணைப்பு நிலையம் அமைக்க, 1.78 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
தற்காலிகமாக சிமென்ட் கூரையால் அமைக்கப்பட்ட தீயணைப்பு நிலையத்தை, முதல்வர் ஸ்டாலின், 2023 ஏப்., 10ம் தேதி, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலமாக துவக்கி வைத்தார்.
இங்கு, ஒரு தீயணைப்பு நிலைய அலுவலர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் என, 10க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.
தீயணைப்பு நிலையத்திற்கு கட்டடம் இல்லாததால், புதிய கட்டடம் கட்ட வேண்டுமென, கோரிக்கை எழுந்தது. இதையடுத்து தற்போது, தீயணைப்பு நிலையத்திற்கு கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்ப்பட்டு, முதற்கட்ட பணிகள் துவங்கி உள்ளன.
இடத்தை அளவீடு செய்து, அடித்தளம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.