/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூட்டுறவு கடன் கிளை சங்கம் காரணையில் துவக்கம்
/
கூட்டுறவு கடன் கிளை சங்கம் காரணையில் துவக்கம்
ADDED : அக் 30, 2024 01:41 AM

மாமல்லபுரம்:மாமல்லபுரம் அடுத்த, காரணை ஊராட்சியில், காரணை, வளவந்தாங்கல் ஆகிய பகுதிகள் உள்ளன. இப்பகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டவர்கள், மானாம்பதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், உறுப்பினர்களாக உள்ளனர். பயிர்க் கடன், நகை உள்ளிட்ட அடகு கடன், மகளிர் சுயஉதவிக் குழு கடன் ஆகியவை உள்ளிட்ட சேவைகளை, இச்சங்கத்தில் பெறுகின்றனர்.
காரணையிலிருந்து, மானாம்பதிக்கு நேரடியாக செல்ல, பேருந்து, ஷேர் ஆட்டோ வசதியில்லை. எச்சூர் வரை ஒரு பேருந்திலும், பின்னர் மானாம்பதிக்கு மற்றொரு பேருந்திலும் சென்று, பணம், நேர விரயங்களால் சிரமப்பட்டனர்.காரணை பகுதியில், கூட்டுறவு கடன் சங்கம் துவக்க, அரசிடம் வலியுறுத்தினர். இதையடுத்து, மானாம்பதி சங்கத்தின் கிளை சங்கம், காரணையில் கிராம சேவை கட்டடத்தில் தற்போது துவக்கப்பட்டு உள்ளது.
நேற்று நடந்த துவக்க விழாவில், திருப்போரூர் ஒன்றியக் குழு தலைவர் இதயவர்மன் துவக்கினார். ஊராட்சித் தலைவர் ராதாகிருஷ்ணன், சங்க நிர்வாகத்தினர் பலர் பங்கேற்றனர்.