/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லையில் நீச்சல்குளம் அமைக்க வலியுறுத்தல்
/
மாமல்லையில் நீச்சல்குளம் அமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜன 26, 2025 09:26 PM
மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால சிற்பங்களை காண, இந்திய, சர்வதேச பயணியர் சுற்றுலா வருகின்றனர். இங்கு கற்கோவிலுடன் அமைந்துள்ள கடற்கரையும் பயணியரை ஈர்த்து, கடற்கரையில் உலவி இளைப்பாறுகின்றனர். மேலும், பயணியர் கடலில் குளித்து மகிழ்கின்றனர்.
இப்பகுதி கடற்கரை செங்குத்தான பள்ளங்களுடன் ஆழமாகவும், பாறைகளுடன் ஆபத்தானதாக உள்ளது. நீச்சல் தெரியாமல் கடலில் குளித்து, ஏராளமானோர் நீரில் மூழ்கி இறந்துள்ளனர். கடலில் குளிக்க தடைவிதித்து எச்சரித்தும், ஆர்வத்தால் குளிக்கின்றனர். நீச்சல் ஆர்வத்திற்காகவும், பொதுமக்கள் நீச்சல் பயிற்சி பெறவும், இங்கு நீச்சல்குளம் அவசியம்.
கடற்கரை கோவில் அருகில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமாக பரந்த இடம் உள்ள நிலையில், அந்நிர்வாகம் பிரத்யேக கட்டண நீச்சல்குளம் அமைத்து, பயணியரையும், பொதுமக்களையும் அனுமதிக்கலாம். அதற்கு பரிசீலிக்க, சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.