/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நெல்வாய் - கிருஷ்ணாபுரம் இடையே தார் சாலை அமைக்க வலியுறுத்தல்
/
நெல்வாய் - கிருஷ்ணாபுரம் இடையே தார் சாலை அமைக்க வலியுறுத்தல்
நெல்வாய் - கிருஷ்ணாபுரம் இடையே தார் சாலை அமைக்க வலியுறுத்தல்
நெல்வாய் - கிருஷ்ணாபுரம் இடையே தார் சாலை அமைக்க வலியுறுத்தல்
ADDED : அக் 04, 2024 01:52 AM

மதுராந்தகம்,:மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்டு, நெல்வாய் ஊராட்சி உள்ளது. இதில், கிருஷ்ணாபுரம், அம்பேத்கர் நகர் உள்ளிட்ட குக்கிராமங்கள் உள்ளன.
நெல்வாய் - உத்திரமேரூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து, செல்லியம்மன் கோவில் பகுதி வழியாக, கிருஷ்ணாபுரம் வரை, 2 கி.மீ., துாரம் மண் சாலை உள்ளது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், ஜல்லிக்கற்கள் கொட்டி, கப்பி சாலை அமைக்கப்பட்டது. அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
கப்பி சாலை அமைக்கப்பட்டு, 20 ஆண்டுகளை கடந்தும், தார் சாலை அமைக்கப்படவில்லை. ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் கப்பி சாலை உள்ளதால், இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளி கல்லுாரி செல்லும் மாணவ - மாணவியர் மற்றும் வெளியூர் பகுதிக்கு வேலைக்கு செல்வோர் பாதிக்கப்படுகின்றனர்.
மழைக் காலங்களில் சேறும், சகதியுமாகி பயன்படுத்த முடியாதவாறு மாறி விடுகிறது.
எனவே, ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள், கப்பி சாலையை ஆய்வு செய்து, தார் சாலை அமைத்து தர வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.