/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சமுதாய நலக்கூடம் அமைக்க கரிக்கிலியில் வலியுறுத்தல்
/
சமுதாய நலக்கூடம் அமைக்க கரிக்கிலியில் வலியுறுத்தல்
சமுதாய நலக்கூடம் அமைக்க கரிக்கிலியில் வலியுறுத்தல்
சமுதாய நலக்கூடம் அமைக்க கரிக்கிலியில் வலியுறுத்தல்
ADDED : நவ 17, 2024 10:00 PM
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்டு, கரிக்கிலி ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் அண்ணா நகர், கொளத்துார், சித்தாமூர், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட குக்கிராமங்கள் உள்ளன.
இப்பகுதியில், 1,500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி, விவசாயம், தனியார் நிறுவனங்களில் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்யும் மக்கள் அதிகம் வாழும் பகுதியாகும்.
இப்பகுதி மக்கள், தங்களின் இல்ல சுப நிகழ்ச்சிகளை மதுராந்தகம், நெல்வாய், உத்திரமேரூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் நடத்தி வருகின்றனர்.
இதனால், பொருளாதார சிக்கலும், வீண் அலைச்சலும் ஏற்படுகிறது. எனவே, கரிக்கிலி ஊராட்சியில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டால், நெல்லி, மங்கலம், வெள்ளபுத்துார் உள்ளிட்ட ஊராட்சி மக்களும் பயன்பெறுவர்.
எனவே, சமுதாய நலக்கூடம் கட்டித்தர, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.