/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சமுதாய நலக்கூடம் அமைக்க வலியுறுத்தல்
/
சமுதாய நலக்கூடம் அமைக்க வலியுறுத்தல்
ADDED : மே 17, 2025 08:51 PM
சித்தாமூர்:சித்தாமூர் அடுத்த இந்தலுார் ஊராட்சியில் 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
மக்கள் பயன்பாட்டிற்காக 20 ஆண்டுகளுக்கு முன் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது.
கோட்டைபுஞ்சை, பருக்கல், கயப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள், தங்களது குடும்பங்களின் நிச்சயதார்த்தம், திருமணம், சீமந்தம், பிறந்தநாள் விழா போன்ற சுப நிகழ்ச்சிகளை சமுதாயகூடத்தில் நடத்தி வந்தனர்.
முறையான பராமரிப்பு இல்லாததால் பழுதடைந்ததால், சமுதாய நலக்கூடத்தை பொதுமக்கள் பயன்படுத்த விருப்பம் காட்டவில்லை. ஆகையால் தற்போது சமுதாய நலக்கூடம் சீரழிந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
இதனால் பொதுமக்கள் தங்களின் குடும்ப சுப நிகழ்ச்சிகளை நடத்த, மண்டபம் தேடி சித்தாமூர், அச்சிறுப்பாக்கம் போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
ஆகையால் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பழைய சமுதாயநலக் கூடத்தை அகற்றி புதிய சமுதாயநலக் கூடம் அமைத்து, ஊராட்சி நிர்வாகத்திற்கு வருவாய் ஈட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்கின்றனர்.