/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சுரங்கப்பாதையில் பாதசாரிகளுக்கு வழி ஏற்படுத்த வலியுறுத்தல்
/
சுரங்கப்பாதையில் பாதசாரிகளுக்கு வழி ஏற்படுத்த வலியுறுத்தல்
சுரங்கப்பாதையில் பாதசாரிகளுக்கு வழி ஏற்படுத்த வலியுறுத்தல்
சுரங்கப்பாதையில் பாதசாரிகளுக்கு வழி ஏற்படுத்த வலியுறுத்தல்
ADDED : ஜூலை 14, 2025 02:16 AM
குரோம்பேட்டை,:குரோம்பேட்டை, ராதா நகர் ரயில்வே கேட் மூடப்படும் போது, ஜி.எஸ்.டி., சாலை, ராதா நகர் சாலையில், வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால், அங்கு இலகு ரக வாகன சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
பல இழுபறிக்கு பின், 15.47 கோடி ரூபாயில் பணிகள் முடியும் நிலையை எட்டியுள்ளது. அதனால், விரைவில் இச்சுரங்கப்பாதை பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என தெரிகிறது.
சுரங்கப்பாதையை திறந்தால், அங்குள்ள ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்படும். அப்போது, வாகனங்கள் சுரங்கப்பாதை வழியாக செல்லும். ஆனால், இருபுறத்திலும் உள்ள மக்கள், ரயில், பேருந்து நிலையங்களுக்கு செல்ல முறையான பாதை ஏற்படுத்தப்படவில்லை.
இதை கண்டித்து, தாம்பரம் மாநகராட்சி 2 - 3 மண்டல குடியிருப்போர் நலச்சங்க இணைப்பு மையம் சார்பில், நேற்று ரயில்வே கேட் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.